யாழ்.மாவட்டத்தில் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய பெண் உட்பட 6 பேர் கைது!

யாழில் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் பெண் ஒருவர் உட்பட ஆறு பேர் நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுன்னாகம் , பருத்தித்துறை , வல்வெட்டித்துறை , மற்றும் மானிப்பாய் ஆகிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

நீர் இறைக்கும் இயந்திரத்தை திருடிய குற்றசாட்டில் சாவற்காட்டு பகுதியை சேர்ந்த ஒருவர் மானிப்பாய் பொலிஸாராலும், வீடுகளை உடைத்து நகை பணம் என்பவற்றை கொள்ளையடித்த குற்ற சாட்டில் கோண்டாவில் மற்றும்

சுன்னாகம் பகுதியை சேர்ந்த இருவரை சுன்னாக பொலிஸாரும் , பெண் ஒருவரின் சங்கிலியை அறுத்த குற்றசாட்டில் கற்கோவளம் பகுதியை சேர்ந்த ஒருவரை வல்வெட்டித்துறை பொலிஸாரும் , வல்லிபுர ஆழ்வார் கோவில் சூழலில்

சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடினார்கள் எனும் குற்றச்சாட்டில் கொழும்பை சேர்ந்த பெண் ஒருவர் உட்பட இருவரை பருத்தித்துறை பொலிஸாரும் கைது செய்துள்ளனர்.
#jaffna   #tamilnews

No comments

Powered by Blogger.