கானாவில் கனமழை34 பேர் உயிரிழப்பு!

கானாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரையில் 34 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவின் வடக்கு பகுதியில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், கானாவில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அங்குள்ள புர்கினா பாஸோ என்ற இடத்திலுள்ள பாக்ரே அணை முழுவதும் நிரம்பியது.

இதன்காரணமாக அணையிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதைத்தொடர்ந்து, கரையோரம் வசித்த மக்கள் அணையிலிருந்து வெளியான வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இதன்போது சுமார் 34 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் சிலர் மாயமாகியுள்ளதாகவும் அந்நாட்டு ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, கானாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் இடம்பெற்ற 52 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது. 
Powered by Blogger.