முப்பத்தொராவது ஆண்டுகள் ஆனதின்று..4ம் நாள்!

அதிகாலையிலே
கண் விழித்தான் திலீபன்
அவன்
காலடியில் தமிழினமே
குவிந்து கிடக்கிறது
கதிரவனும் கனன்று
கதிர்பரப்ப காலை புலர்ந்தது
இரு பெண்கள் திலீபன் வழியில்
இணைந்திட வந்தனர்
வல்வெட்டித் துறையிலும் ஐவர்
திலீபன் வழி தொடர்வதாய்
வந்தன செய்திகள்
வரலாறு காணாத மக்கள் எழுச்சி
திக்கெட்டும் தீயெனப் பரவியது
அலையென நல்லூரை
ஆக்கிரமித்த மக்கள் வெள்ளம்
கந்தனையும் நாச்சிமாரையும்
துணைக்கு அழைத்து
காத்திட வேண்டி கதறி அழுதனர்
வன பிதா சிங்கராயர் வந்திருந்தார்
வழிந்தோடும் கண்ணீரில் வார்த்தைகளை தொலைத்தார்
ஈரோஸ் தலைவர்கள் வந்தனர்
ஈகி திலீபனை கண்டு மெய்யுருகினர்
வந்தவர் எல்லாம் திலீபனை
வாய் நனைக்க கேட்டு நிற்க
வாய் திறந்து புன்னகைத்து
திடமாக மறுத்து நின்றான்
பாலா அண்ணை வந்திடுவார்
பாரதம் சொல்லும் பதிலோடு
ஊன் உருகும் திலீபன்
உயிர் பெறுவான் காத்திருந்தோம்
ஊண் துறந்த திலீபன்
ஊன் உருக கிடக்கிறான்
கந்தனின் மணி ஓசை
காற்றினில் கலங்கி வர
கார் இருள் மேகங்கள்
கருவுற்று காத்துக் கிடக்க
நா வரண்ட திலீபன்
நாடி துடிப்பு அதிகரிக்க
திலீபத்தின் பயணத்தில்
நான்காம் நாள் கடந்து
முப்பத்தொரு ஆண்டுகள் ஆனதின்று...

#திலீபம்

#ஈழத்துப்பித்தன்
18.09.2017

2003ம் ஆண்டு சமாதானகாலத்தில் திலீபன் நினைவாக நல்லூரடியில் கட்டப்பட்டு 2009களில் சிறீலங்கா இராணுவத்தால் இடித்தளிக்கப்பட்ட தியாகதீபம் திலீபனின் நினைவுத்தூபி.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.