ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நித்யா

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கைப்படம் ‘The Iron Lady' எனும் பெயரில் தயாராகிறது.
பாரதிராஜா, தாசரி நாரயண ராவ்,
ஆதித்யா பரத்வாஜ், ஏ.எல்.விஜய் எனப் பல இயக்குநர்கள் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க போவதாக அறிவித்திருந்த நிலையில், இயக்குநர் மிஷ்கினிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பிரியதர்ஷினியும் எடுக்கப் போவதாக அறிவித்தார். தற்போது அவர் மற்றவர்களையெல்லாம் முந்திப் படத்தின் தலைப்பையும் வெளியிட்டிருக்கிறார். அதன் அடிப்படையில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் தலைப்பை வெளியிட்டுள்ளார்.
'The Iron Lady' என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் நடிகை நித்யா மேனன் ஜெயலலிதா கதாபாத்திரத்திலும், நடிகை வரலட்சுமி சசிகலாவாகவும் நடிக்கவுள்ளனர். விரைவில் படம் பற்றி முழு அறிவிப்பு வெளியாகும் எனவும், கடந்த நான்கு மாதமாக இப்படத்திற்கான வேலைகளில் ஈடுபட்டுவருவதாகவும், இப்படத்தின் பிரமாண்டமான தொடக்க விழா விரைவில் நடக்கவுள்ளதாகவும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படம், ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் பிரியதர்ஷினி அதிமுக அமைச்சர்கள் இருவரின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.