பிரான்ஸ் நாட்டிக்கு வருகைதந்த வவுனியா இளைஞன் நாடுகடத்தப்பட்டார்!

இலங்கையிலிருந்து   பாரிஸ் சென்ற தமிழ்  இளைஞர் ஒருவர் சிலமணி நேரங்களில் அந்நாட்டு அரசால் கைது செய்யப்பட்டடு திருப்பி அனுப்பப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வட தமிழீழம் வவுனியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் வெளிநாட்டு முகவர் ஊடாக பாரிசுக்கு சென்ற நிலையில் உறவினரின் வருகைக்காக வீதியில் காத்திருந்தார்.

அந்த நேரத்தில் அவரை இனங்கண்டு விசாரித்த பாரிஸ் காவல்துறையினர்  குறித்த நபரிடம் உரிய ஆவணங்கள்  ஒன்றும் இல்லாத நிலையில் மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை இலங்கைக்கு நாடுகடத்தியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.