யாழில் அஸ்மீனின் கொடும்பாவி எரிப்பு!

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அஸ்மீனின் கொடும்பாவி இரண்டாவது முறையாகவும் யாழ்ப்பாண முஸ்லிம் மக்களால் இன்று வீதியில் இழுத்து செல்லப்பட்டு எரியூட்டப்பட்டது.

யாழ். மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள பெரிய முஹிதீன் ஜும்மா பள்ளிவாசலில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மாகாண சபை உறுப்பினர் அஸ்மீன் அயூப் அண்மைக்காலமாக யாழ். முஸ்லிம் மக்கள் தொடர்பாக தெரிவித்து வரும் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தே கொடும்பாவியை முஸ்லிம்கள் எரித்துள்ளனர்.


இதில் கலந்து கொண்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

வடக்கு மாகாண சபை உறுப்பினரனின் பதவிக்காலம் அடுத்த மாதம் நிறைவடைவதையிட்டு மீண்டும் தனக்கான அரசியலை முன்னெடுக்க, வட பகுதி முஸ்லிம் மக்கள் குறித்து முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை நேரடியாகவும் ஊடகங்கள் வாயிலாகவும் அஸ்மீன் பரப்பி வருவதாக குற்றம் சாட்டினர்.

எனவே மாகாண சபை உறுப்பினர் இந்த விடயங்களில் இருந்து விலகிக் கொள்ளுமாறு மக்கள் கேட்டுக்கொண்டனர்.

#jaffna  #srilanka    #tamilnews   #Asmin

No comments

Powered by Blogger.