யாழில் பாரிய திட்டத்தால் மக்களுகு ஏமாற்றமா??

வடமராட்சி கிழக்கு களப்புக் கடல் நீரைச் சுத்திகரித்து யாழ். குடா நாட்டு மக்களுக்கு குடி நீரை வழங்கும் திட்டமொன்று முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்த திட்டத்தால் வடமராட்சி கடற் பிரதேசத்தை நம்பி வாழும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், யாழ். மாவட்ட அரசாங்க அதிபரிடம் வலியுறுத்தியிருந்தார்.

எனினும் யாழ். குடா நாட்டில் குறித்த குடிநீர் திட்டத்தை ஆரம்பிக்க 200 கோடி ரூபாய் நிதியை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அத்துடன் இந்த திட்டத்திற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் துமிந்த திசாநாயக்க ஆகியோர் கூட்டாக பரிந்துரைத்திருந்த நிலையில் இந்த அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதால் யாழ். குடா நாட்டில் குடிநீர் பிரச்சினையை எதிர்கொண்டுள்ள மக்கள் மகிழ்ச்சியடையவுள்ள போதும், வடமராட்சி கடற் பிரதேச மீனவர்கள் ஏமாற்றத்தை எதிர்நோக்கவுள்ளனர்.
#Sumanthiran #Jaffna #Ranil Wickremesinghe  #srilanka  #tamilnews

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.