கோத்தபாயவுக்கு நீதவான் அறிவித்துள்ள முடிவு என்ன??

தங்காலை - வீரகெட்டிய, மெதமுலான டி.ஏ.ராஜபக்ச நினைவிடம் மற்றும் அருங்காட்சியகம் ஆகியவற்றை நிர்மாணிக்க அரச பணத்தை தவறாக பயன்படுத்தினார்கள் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய
ராஜபக்ச உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான முதல் வழக்கின் அறிக்கை விசேட மேல் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால், தமது நீதிமன்றத்தின் கீழ் நடக்கும் விசாரணைகளை முடிவுக்கு கொண்டு வருவதாக கொழும்பு பிரதான நீதவான் ரங்க திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

குற்றம் சுமத்தப்பட்டுள்ள 7 பேருக்கு எதிராக சட்டமா அதிபர், விசேட மேல் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளதால், நீதவான் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு விசாரணைகளை நிறைவு செய்யுமாறு பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு, நீதிமன்றத்தில் விடுத்த கோரிக்கையை அடுத்து நீதவான் இந்த முடிவை அறிவித்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, இலங்கை காணிகளை நிரப்புதல் மற்றும் அபிவிருத்தி செய்யும் திணைக்களத்தின் முன்னாள் தலைவர் லியன ஆராச்சிகே பிரசாதத் ஹர்ஷான் டி சில்வா, அந்த கூட்டுத்தாபனத்தின் முன்னாள் முகாமையாளர் காமஹெதி ராலகே ஹாத்ரா உதுலாவதி கமலதாச, சுசம்மிக்க கோமிந்த ஆட்டிகல, சமன் குமார ஆப்ரகாம் கலப்பத்தி, மாருக்கு தேவகே மகிந்த சாலிய, மாதம்பெரும ஆராச்சிலாகே மல்லிகா ஆகிய 7 பேருக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#Colombo #Gotabhaya Rajapaksa    #srilanka  #tamilnews  #just   #court 

No comments

Powered by Blogger.