பெற்றால்(த்)தான் பிள்ளையா??

கருவறைக்கு விடியல் தேடி
கலங்கி தவித்து நித்தமும்
நிம்மதியினை தொலைத்து
ஆழ்மனப் பெருமூச்சு
பேரலைகளுடன் அலையும் பெண்களுக்கான விழிப்புணர்வு
 பதிவு....

பெற்றால்(த்)தான் பிள்ளையா
******************* *************

மலடியென்ற பேச்சுக்கு
மனமுடைந்து போகும்
மங்கையர் குல
மஞ்சள் நிலாக்களே ...!
( ஏன் இந்த அழுகை )

எங்கே உங்கள் ஏக்கம்
எதற்காக உங்களுக்கு பிள்ளை
என்னதான் செய்யப் போகின்றீர்கள்
எத்தனை பிள்ளைதான் வேண்டும் உங்களுக்கு  ...!
( எதற்கு உங்களுக்கு பிள்ளை )

அம்மையு மின்றி
அப்பனு மின்றி
அணைவு மின்றி
அனாதையாய் எத்தனை குழந்தைகள் ...!
( எங்கே உங்கள் தாய்மை )

வீடு மற்றே....
வீதியில் தவழ்ந்து
வீரர்களாய் தினம்
வீணாகும் உயிர்கள்தான் ஆயிரம் ...!
( இவர்களும் குழந்தைகள் தான் )

ஆண்டுமடிய சொத்துக்கள்
ஆளுக்கொரு அடுக்குமாளிகைகள்
ஆனாலும் உங்களால்
ஆதரவுகொடுக்க முடியாதோ அனாதைக்கு ...!
( அம்மா என்றழைக்கத் தவிக்கிறார்கள் அனாதைகளாய் உங்கள் முன்னே.... )

தாய்மையில் தவறென்று
தவிப்பது தகுமோ...!
தாய்மை என்பது பெற்றெடுப்பதில் மட்டுமல்ல
தத்தெடுப்பதிலும் இருக்கின்றது ...!
( பெற்றாலும் தத்தாலும் குழந்தை குழந்தைதான் )

**** **** **** **** ****
வெல்லவூர் சுபேதன்.

(யாரையும் வேதனைப்படுத்த அல்லவே....! )

அனாதைகள் என சமூகத்தால் பிரித்துவைக்கப்பட்டவரைகளையும் சற்று சிந்திப்பீராக....!

No comments

Powered by Blogger.