ஒரு பெண்ணின் மரணத்தை வைத்து எல்லோரும் நீதிபதியாகிக் கொண்டிருக்கிறார்கள்.

துரதிர்ஷ்டவசமாக அதைத்தான் நானும் செய்யப் போகிறேன்.

இங்கு பிரச்சினையே இதுதான்...எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். கேட்கத்தான் ஆளில்லை.
2009 தமிழின அழிப்பிற்கு பின்பு நடந்த முதல் தற்கொலையா இது? முதல் கொலையா இது? ஆறுகள், குளங்களிலிருந்து கண்டெடுக்கப்பட்ட முதல் உடலா இது?

அது ஒன்றல்ல, பத்தல்ல பல நூறைத் தாண்டும்.

2009 இற்கு முன்பு நாம் இப்படி அனாமதேய  சாவுகளை, குடும்ப பிணக்குக்களை வகை தொகையில்லாமல் அனுபவித்தோமா?

இன அழிப்பு பின் புலத்தில் வாழ நேரிடுவதற்கு ஒரு இனக் குழுமம் கொடுக்கும் உச்சபட்ச விலை இது.

இன அழிப்பு பின் புலத்தில் மனித உறவுகளின் சிதைவு / இனஅழிப்பு பின்புலத்தில் ‘இசங்களின்’ வீழ்ச்சி/ இனஅழிப்பு பின் புலத்தில் பெண்களும் – பெண்ணியமும் -பெண்ணுரிமையும் என்று இதன் பின்னணி பெரியது.

இங்கு பிரதான குற்றவாளி இன அழிப்பு அரசு, உதிரிக் குற்றவாளிகள் நாம் ஒவ்வொருவரும் என்பதையும் மறந்து இங்கு நியாயத் தீர்ப்பு வாசித்துக் கொண்டிருக்கிறோம்.

எந்த முன் முடிவுகளும் இன்றி இதன் பின் புலத்தை அறிய விரும்பினால் கீழே உள்ள ஆய்வை வாசிக்கவும்.

ஆங்கிலத்தில் மட்டுமல்ல தமிழிலும் இணைக்கிறேன்.

முடிந்தால், நேரம் கிடைத்தால் இந்த அபலைப் பெண்ணின் மரணத்தை மட்டும் முன் வைத்து ஒரு ஆய்வை எழுதுகிறேன்.

http://tamildiplomat.com/women-genocide-assessment-involving-psychology-sex-violence-family-culture/

http://desathinkural.com/2018/03/12/இனஅழிப்பு-பின்புலத்தில்/

No comments

Powered by Blogger.