மட்டக்களப்பில் இரண்டு சிறுவர்கள் செய்த காரியம்!

ஜேர்மன் தம்பதியினரின் பணம் மற்றும் பெறுமதியான இரண்டு தொலைபேசி ஆகியவற்றைக் கொள்ளையடித்த இரண்டு சிறுவர்களை மட்டக்களப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த ஜேர்மன் தம்பதியினர் மட்டக்களப்பு கடற்ரையில் பயணப் பொதியை வைத்து விட்டு கடலில் குளிக்கும்போது அங்கு நின்ற இரண்டு சிறுவர்கள் அவர்களின் பயணப் பொதிகளில் இருந்த 6000 ருபா பணமும் 80 ஆயிரம் மற்றும் 25 ஆயிரம் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசியையும் திருடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக ஜேர்மன் தம்பதியினர் செய்த முறைப்பாட்டுக்கமைய, பொலிஸார் பாலமீன்மடு மற்றும் திராய்மடு ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட சோதனைகளின் பின்னர் இரண்டு சிறுவர்களைக் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திராய்மடு பிரதேசத்தைச் சேர்ந்த 13 மற்றும் 16 வயதுடைய சிறுவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருடப்பட்டதாக கூறப்படும் இரண்டு தொலைபேசிகள் மற்றும் அவர்களிடமிருந்த ரூ. 3475 ரூபா பணம் ஆகியவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு சிறுவர்களையும், திருடப்பட்ட பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசி ஆகியவற்றை மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். 

No comments

Powered by Blogger.