உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் அரசியல் கைதிகள்!

கொழும்பு மெசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இன்று ஒரு நாள் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் நடத்தி வரும் உணவு தவிர்ப்பு பேராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, இந்த அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 அரசியல் கைதிகள் கடந்த 14ம் திகதி உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து மெகசீன் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகள் இந்த அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தை நடத்துவதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை எம். சக்திவேல் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட தினத்தை அறிவித்து, விடுதலை செய்யும் வாக்குறுதியை வழங்காது போனால், அடுத்த சில தினங்களில் கட்டாயமாக சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பிக்க தாம் தயாராக இருப்பதாக மெகசீன் சிறைச்சாலையின் நிர்வாக அதிகாரிகளிடம் கைதிகள் கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#colombo   #srilanka  #arest  

No comments

Powered by Blogger.