பிக் பாஸ்: ஊழியர் மரணம்!

கமல் தொகுத்து வழங்கிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு அரங்கில்
ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 2ஆவது சீஸனுக்கான படப்பிடிப்புகள் சென்னையை அடுத்த பூந்தமல்லி செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. பலர் இதில் பணியாற்றிவரும் நிலையில் அரியலூர் மாவட்ட மாத்தூரைச் சேர்ந்த குணசேகரன் எனும் நபர் இங்கு ஏசி மெக்கானிக்காக வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு இவர் தங்கியிருந்த அறையின் இரண்டாவது மாடியிலிருந்து கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். ஆனால் அவர் சிசிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதையடுத்து காவல்துறை சார்பில் தற்போது விசாரணை நடந்து வருகிறது.
Powered by Blogger.