பிறப்புறுப்புச் சிதைப்பைத் தடுக்கத் தனி சட்டம்!

சிறுமிகளின் பிறப்புறுப்பைச் சிதைப்பதைத் தடுக்கத் தனிச்சட்டம் வேண்டும் என்று சமூகச் செயல்பாட்டாளர்களும் ஐநாவின் அமைப்புகளும் இன்று (செப்-20) விடுத்துள்ளனர்.

இந்தியாவிலுள்ள தாவூதி போஹ்ரா சமூகத்தினர் மத்தியிலும் சில சன்னிப்பிரிவு முஸ்லீம்கள் மத்தியிலும் இந்த வழக்கம் நடைமுறையாக இருந்து வருகிறது. இக்கொடிய வழக்கம் சில ஆப்பிரிக்க நாடுகளிலும் இருந்து வருகிறது. இதை தடை செய்ய சர்வதேச அளவில் பிறப்புறுப்புச் சிதைப்பிற்கு எதிரான இயக்கம் ஒன்று ஐநாவின் அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இவ்வியக்கமும், ஐநா அமைப்புகளின் உறுப்பினர்களும் இந்தியாவில் கூடினர் அப்போது அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில் அவர்கள் கூறுகையில்,சர்வதேச சட்டம் மற்றும் இந்திய அரசியல் சட்டம் ஆகியவற்றின்படி, பெண்கள் மற்றும் சிறுமிகளின் மனித உரிமைகளை மீறுவதே பிறப்புறுப்புச் சிதைக்கும் நடவடிக்கையாகும். இதி்ல் எந்தவித ஆரோக்கிய விளைவுகளும் ஏற்படாது. ஆனால் இதனால் நீண்டகால நோக்கில் ஆரோக்கியத்திற்கும், மனநலத்திற்கும் பாதிப்புகள் ஏற்படும். எனவே சிறுமிகளையும் பெண்களையும் பாதுகாக்கவும் இந்நடைமுறையை தடுக்கவும் தனிச்சட்டம் வேண்டும் என்று தெரிவி்த்துள்ளனர்.

No comments

Powered by Blogger.