பாணின் விலை 5 ரூபாவால் குறைப்பு!

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து எதிர்வரும் சில தினங்களுக்குள் பாணின் விலையை 5 ரூபாவால் குறைக்க தீர்மானித்துள்ளதாக அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அண்மையில் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட பாணின் விலை தொடர்பில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பேக்கரி உரிமையாளர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினை தொடர்பில் இன்று (19) அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கப்பட்ட கோதுமை மாவின் விலையை குறித்த நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு முன்னர் இருந்த விலைக்கே குறைத்து தருவதவதற்கு அமைச்சர் சம்மதம் தெரிவித்தாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் பாணின் விலையையும் மீண்டும் குறைக்குமாறு அமைச்சர் வேண்டுக்கொண்டதனை அடுத்து அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது. 

No comments

Powered by Blogger.