பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலையை தடுப்போம்!

ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்யுமாறு அரசியல்வாதிகள் சுயநலத்திற்காக பேச வேண்டாம் என தந்தையை பறி கொடுத்த ராஜ்குமார் கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட போது பலியானவர்களில் தர்மன் என்ற இரண்டாம் நிலை பொலிஸ் உத்தியோகத்தரும் ஒருவர்.

இந்த நிலையில், ராஜிவ் கொலையுடன் தொடர்புடையவர்களை விடுதலை செய்யுமாறு முன்வைக்கப்படும் வலியுறுத்தல்கள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் மகன் ராஜ்குமார்,

அப்பா இறக்கும் போது அம்மாவுக்கு வயது 32, அக்கா மலர் விழிக்கு வயது 12, அண்ணன் ராஜசேகருக்கு வயது 11, எனக்கு 8 வயது. சென்னை தேனாம்பேட்டையில், அப்பாவுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தோம்.

காஞ்சிபுரம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்ததால், எங்களுடன் நேரம் அதிகமாக செலவிட முடியவில்லை என்ற ஏக்கம், அப்பாவுக்கு இருந்தது.

விரைவில், சென்னைக்கு மாற்றலாகி வந்துவிடுவேன் என அம்மாவிடம் அவர், அடிக்கடி கூறியதை கேட்டுள்ளேன். 1991, மே 21இல் பணி முடித்து எந்த நேரமானாலும், வீட்டுக்கு வந்துவிடுவேன் என அப்பா கூறியிருந்தார்.

இருப்பினும் ராஜிவுடன், எங்கள் அப்பாவும் பலியாகிவிட்டார். அப்பா இல்லாமல் வாழ்வது, எவ்வளவு கடினம் என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்துள்ளோம்.

அந்த வலி, ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என சுயநலத்திற்காக கூவும் அரசியல்வாதிகளுக்கு எங்கே தெரிய போகிறது.

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரும் தமிழர்கள் என்றால், நாங்கள் யார்? நாங்கள் ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்ய விடமாட்டோம் என்று கூறியுள்ளார்.
#india #rajiv   #tamilnews  #tamiler  #rajkumar

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.