விற்பனைக்கு வருகின்றன பறக்கும் வகை கார்கள்!

நமது வாகனம் பறந்து சென்றால் எப்படி இருக்கும் என நாம் நினைப்பதுண்டு. அந்த எண்ணத்தை சாத்தியப்படுத்தும் வகையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் பறக்கும் கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு வாகனம் தான் பறக்கும் ஸ்போர்ட்ஸ் கார். இந்த காருக்கு கொன்செட்டோ மிலென்யா என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் பறக்கும் காரை இயக்க பைலட் உரிமம் தேவையில்லை. மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் அதிகபட்சமாக 20 அடி உயரத்தில் இந்த கார் பறக்கிறது. ஆளில்லா விமானம் போன்ற வடிவம் கொண்ட இந்தப் பறக்கும் காரில் ஒரே ஒருவர் மட்டுமே பயணிக்க முடியும். சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், எரிபொருள் தேவையை குறைக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ள இந்த கார் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க வழிவகுக்கிறது.

ஏற்கெனவே இதுபோன்று பல பறக்கும் கார்கள் உருவாக்கப்பட்டிருந்தாலும் இது மிகவும் ஆடம்பரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இருந்த இடத்தில் இருந்தே மேல் எழும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் பறக்கும் கார், நகர்ப்புறங்களில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இது ஆறு லித்தியம் அயன் பேட்டரிகள் மூலம் இயக்கப்படுகிறது. ரிமோட் கன்ட்ரோலில் இயங்கும் ஆளில்லா விமானங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் அதிநவீன சாதனமாக இதனை குறிப்பிடலாம். ஒருவர் மட்டுமே அமர்ந்து பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காரை புல் தரையில் இருந்து கூட டேக் ஆஃப் செய்யலாம். ஒரு மணி நேரத்தில் செல்லவேண்டிய பகுதிக்கு இந்தப் பறக்கும் கார் மூலம் ஐந்தே நிமிடத்தில் சென்றடையலாம்.

மேலும் இந்தப் பறக்கும் கார் பறந்துக்கொண்டிருக்கும்போது பேட்டரி பழுதானாலும் ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு சென்று பின் தரையிறங்கும் விதத்தில் அதிநவீன தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது. எனவே இந்தப் பறக்கும் கார் போக்குவரத்துக்கு மிகவும் பாதுகாப்பானது எனத் தெரிவிக்கின்றனர் இதன் வடிவமைப்பாளர்கள்.




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.