சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது பிரச்சனைகளை ஏற்படுத்தும்!

சபரிமலை கோயில் வழிப்பாட்டில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உத்தரவிட்ட நிலையில், நீதபதி இந்து மல்கோத்ரா மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளார்.
இந்தத் தீ்ப்பு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி கன்வில்கர் ஆகியோர் ஒரு தீர்ப்பை வழங்கினர்.நீதிபதிகள் இந்து மல்கோத்ரா, சந்திரசூட், ரோஹிண்டன் நாரிமன் ஆகியோர் தனித்தனியாக தீர்ப்பு வழங்குகிறார்கள். இதில் பெரும்பான்மையான நீதிபதிகள் தீர்ப்பை தலைமை நீதிபதியான தீபக் மிஸ்ரா வாசித்தார், அதில் "சபரிமலையில் நீண்டகாலமாக பெண்கள் மீது பாகுபாடு காட்டப்பட்டு வருகிறது. வழிபாடுகளில் பாகுபாடு காட்டக் கூடாது. பெண்களை கடவுளாக வணங்கும் நாட்டில் பெண்கள் பலவீனமானவர்கள் அல்ல. பெண்கள் ஆண்களுக்கு சமமானவர்கள்.

கோவிலுக்குள் பெண்கள் செல்ல அனுமதி மறுப்பது சட்ட விரோதம். சபரிமலை கோயில் பக்தர்கள் மட்டும் தனி மதத்தை சேர்ந்தவர்கள் அல்ல.சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று தீபக் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.நீதிபதி கன்வில்கருடன் இணைந்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அளித்த தீர்ப்பை ஏற்பதாக நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட் அறிவித்துள்ளார்.சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என 5 நீதிபதிகள் அமர்வில் 4 நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

இந்நிலையில் ஐந்தாவது நீதிபதியான இந்து மல்கோத்ரா மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளார் அதில் " மதரீதியான பழக்கங்கள் பற்றி நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது. வழிபாடு நடத்துபவர்கள் முடிவு செய்ய வேண்டும். மதரீ தியான நம்பிக்கைகளில் உள்ள பிரச்னைகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. சம உரிமை என்பதுடன் மத ரீதியான பழக்கங்களை தொடர்புபடுத்தக்கூடாது சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்தும்" என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.