சுமந்திரன் புதிதாக ஒன்றும் கூறவில்லை!

அரசியலமைப்பில் அதிகாரம், மத்திய மற்றும் மாகாண நிறுவனங்களால் பிரயோகிக்கப்படுவதென்பது சமஷ்டிக் கட்டமைப்பை வலியுறுத்தவில்லையா? என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் காலியில் சமஷ்டி தொடர்பில் சுமந்திரன் வெளியிட்ட கருத்து குறித்து இன்று விளக்கமளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசியலமைப்பில் அதிகாரம் மத்திய மற்றும் மாகாண நிறுவனங்களால் பிரயோகிக்கப்படுவதென்பது சமஷ்டிக் கட்டமைப்பை வலியுறுத்தவில்லையா? இந்த விடயத்தையே சுமந்திரன் பெயர்ப்பலகை தேவையில்லை, அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு அரசியலமைப்பில் இடம்பெற வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

சமஷ்டியும், சுமந்திரனும் சம்பந்தமாக அண்மை நாட்களில் பலரும் தங்கள் மனம் போனவாறெல்லாம் கருத்துரைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

குறித்த கூட்டத்தில் சுமந்திரன் புதிதாக ஒன்றும் கூறவில்லை. அவர் இது தொடர்பாக மறுநாளே விளக்கமளித்து உள்ளார்.

அவருடைய விளக்கம் வெளிவந்ததற்குப் பின்பும், அவர் சமஷ்டியை நிராகரித்துள்ளார் என்று சொல்வது வேண்டுமென்றே அவர் மீது வேண்டாத குற்றமொன்றைச் சுமத்துவதாகவே அமையும் என கூறியுள்ளார்.

#Kirushnapillai #Thurairasasingam  #M A Sumanthiran #tamilnews  #srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.