பேர்லின் வாழ் இளையோர்களால் கல்வி வளர்ச்சிக்கு உதவி!

புலம்பெயர் தேசத்தில் பிறந்தாலும் பாசத்தை மறவாது ஊரோடும் உணர்வோடும் ஒருங்கிணையும் பேர்லின் வாழ் இளையோர்கள் - பேர்லின் அம்மா உணவகம்

புலம்பெயர் தேசத்தில் பிறந்தாலும் பாசத்தை மறவாது ஊரோடும் உணர்வோடும் ஒருங்கிணையும் வகையில் பேர்லின் வாழ் இளையோர்களால்  தாயகத்தில் கிளிநொச்சி வட்டக்கச்சி மாயவனுரில்  நான்கு ஆசிரியர்கள் - 50 க்கும் மேற்பட்ட   மாணவர்களுடன் புதிய அறிவொளிகல்விச்செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இக் கல்விச்செயற்திட்டத்தால் வறுமை நிலையில் உள்ள  மாணவர்கள்  இலவசமாக தமது கல்வியை மேம்படுத்த வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இக் கல்விச்செயற்திட்டம் அம்மா உணவகத்தின் ஒருங்கிணைப்பில்  தமிழ் இளையோர் அமைப்பு - யேர்மனி , பேர்லின் மாநில இளையோர்களாலும்  மற்றும் செல்வி சபீனா உதயகுமார் அவர்களின் இணைந்த  நிதி  அனுசரணையில் நடைபெறுகின்றது .இவ்வாறான கல்விச்செயற்திட்டம் பேர்லின் அம்மா உணவகத்தின் நிதி அனுசரணையில் ஏற்கனவே நான்கு  இடங்களில் நடைபெறுவது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.