கோத்தபாய பெருமிதம்!

ஒரு சிறந்த சமூகத்தைக் கட்டியெழுப்ப முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் மட்டுமே முடியும் என்பதையே இந்த மக்கள் வெள்ளம் காட்டியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ரஜபக்ச தெரிவித்துள்ளார்.

“ஜனபலய கொலம்பட்ட” பேரணியில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர் ,

“எதிர்பார்த்ததை விட அதிகளவான மக்கள் இன்றைய பேரணியில் கலந்துகொண்டனர். இந்த மக்களின் கருத்தின் அடிப்படையில் எமது அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையும்.

மகிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டும் என்ற கோரிக்கையினை பேரணியில் கலந்துகொண்ட மக்கள் விடுத்துள்ளனர். இந்த நாட்டை சிறந்த முறையில் நிர்வகிக்க வேண்டும்.

பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். பாதால உலக குழுவினரை கட்டுப்படுத்த வேண்டும். இவையனைத்தும் மகிந்த ராஜபக்சவினால் மட்டுமே முடியும்.

இதனை இன்றைய பேரணியில் கலந்துகொண்ட மக்கள் வெள்ளம் காட்டியிருப்பதாக” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.