ஆட்சியை மீளக் கைப்பற்றுவது- மகிந்தவால் இயலாத காரியம் !

குற்­ற­வா­ளி­க­ளை­யும் மோச­டி­யா­ளர்­க­ளை­யும் தன்­வ­சம் வைத்­துக் கொண்டு முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச மீண்­டும் ஆட்சி பீடம் ஏறும் முயற்­சி­களை மேற்­கொள்­வது சாத்­தி­ய­மற்ற விட­யம்.
இவ்­வாறு ஐக்­கிய தேசியக் கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஹிரு­ணிகா பிரே­ம­ச் சந்­திர தெரி­வித்­துள்­ளார்.
ஐக்­கிய தேசியக் கட்­சி­யின் தலை­மை­ய­க­மான சிறி­கொ­தா­வில் நேற்று நடத்­தப்­பட்ட செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் கலந்து கொண்டு கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.
அவர் தெரி­வித்­ததா­வது-,
மகிந்த ராஜ­பக்ச கடந்த காலங்­க­ளில் குற்­ற­வா­ளி­க­ளைத் தன்­வ­சம் வைத்­தி­ருந்­த­தால்­தான் பெரும் விளை­வு­க­ளைச் சந்­தித்­தார். அதன்­தொ­டர்ச்­சியே தற்­போ­தும் நடை­பெ­று­கின்­றது. தேசிய அர­சைப் பய­னற்­றது என்­றும் தூற்­றும் எந்­தத் தகு­தி­யும் எதிர்த்­த­ரப்­பி­ன­ருக்­குக் கிடை­யாது- என்­றார்.

No comments

Powered by Blogger.