மகிந்த குடும்பத்தை அரசு சட்டத்தின் முன் நிறுத்தாது -சந்தியா எக்னெலிகொட!

முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச குடும்­பத்தை இந்த அரசு எப்­போ­தும் சட்­டத்­தின் முன் நிறுத்­தாது என்று தெரி­வித்­துள்­ளார் காணா­மல் ஆக்­கப்­பட்ட ஊட­க­வி­ய­லா­ளர் பிர­கீத் எக்­னெ­லி­கொ­ட­வின் மனைவி சந்­தியா எக்­னெ­லி­கொட.


கொழும்­பில் நேற்று நடத்­திய செய்­தி­யா­ளர் சந்­திப் பில் கருத்­துத் தெரி­வித்­த­போது அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார். அவர் தெரி­வித்­ததா­வது:-


பிர­கீத் காணா­மல் ஆக்­கப்­பட்­டமை தொடர்­பான வழக்கை விரை­வாக விசா­ரணை செய்ய வேண்­டும். கூட்­ட­ரசு இந்த விட­யத்­தில் பொறுப்­பு­டன் செயற்­ப­டு­வது கட்­டா­யம்.


மகிந்த ராஜ­பக்­ச­வும், கோத்­த­பாய ராஜ­பக்­ச­வுமே பிர­கீத் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­மைக்­குப் பொறுப்­பா­ளி­கள். 12 ஆண்­டு­க­ளா­கத் தந் தையை இழந்­துள்ள எனது பிள்­ளை­க­ளுக்கு கூட்­ட­ரசு இது­வரை உத­வி­ய­ளிக்­க­வில்லை. பிர­கீத்­தின் விசா­ர­ணை­க­ளுக்­குத் தேவை­யான இரா­ணுவ ரீதி­யான ஒத்­து­ழைப்­பு­க­ளைப் பெற்­றுத் தர வேண்­டும் என்று கோரி­யி­ருந்­தேன். அது­வும் நடக்­க­வில்லை.


இனி­யும் தீர்­வைப் பெறாது இருக்க முடி­யாது. அடுத்த இரண்டு மாதங்­க­ளுக்­குத் தொடர்ச்­சி­யான தெய்வ வழி­பா­டு­களை முன்­னெ­டுக்க எதிர்­பார்த்­துள்­ளேன். இரா­ணு­வத்­தால் மறைக்­கப்­ப­டு­கின்ற விட­யங்­களை குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வுக்கு வழங்க அரசு தலை­யீடு செய்ய வேண்­டும். இவ்­வாறு செய்­யா­விட்­டால் எனது சாபம் அர­சுக்­குப் போய்ச் சேரும்.


ராஜ­பக்ச குடும்­பத்தை இந்த அரசு எப்­போ­தும் சட்­டத்­தின் முன் நிறுத்­தப் போவ­தில்லை. அவர்­க­ளுக்­கும், குற்­றத்தை மறைக்­கும் நபர்­க­ளுக்­கும் இயற்­கையே தண்­டனை வழங்க வேண்­டும் -– என்­றார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.