தமிழ், சிங்­கள மொழிப் பிரச்­சினை- ஊவா சபை­யில் அமளி துமளி

ஊவா மாகாண சபை அமர்­வின் நிகழ்ச்சி நிர­லில் ஏற்­பட்ட குள­று­படி மற்­றும் மொழிப் பிரச்­சினை ஆகி­ய­வற்­றி­னால் சபை அமர்­வில் பெரும் அம­ளி­து­மளி இடம்­பெற்று சபை அமர்­வும் சில மணி நேரம் ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.

ஊவா மாகாண சபை அமர்வு நேற்­றுக் காலை சபைத் தலை­வர் ஏ.எம்.புத்­த­தாச தலை­மை­யில் சபை மண்­ட­பத்­தில் நடை­பெற்ற போதே மேற்­படி அமளி துமளி ஏற்­பட்­டது.

ஊவா மாகாண சபை அமர்வு நிகழ்ச்சி நிர­லில் சபை உறுப்­பி­னர் எம்.சச்­சி­தா­னந்­த­னி­னால் முன்­வைக்­கப்­பட்ட தீர்­மான வரைவு சிங்­கள மொழி­யில் சரி­யா­ன­தா­க­வும் தமிழ் மொழி­யில் பிழை­யா­க­வும் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

தமிழ் மொழி­யில் வழங்­கப்­பட்ட நிகழ்ச்சி நிர­லைப் பார்த்து, தீர்­மான வரைவை முன்­வைக்­கும்­போது தம்­மால் முன்­வைக்­கப்­பட்ட தீர்­மான வரைவு இது­வல்ல என்று சபை உறுப்­பி­னர் எம்.சச்­சி­தா­னந்­தன் கூறி­ய­து­டன், சிங்­கள மொழி­யி­லான நிகழ்ச்சி நிர­லில் தமது தீர்­மான வரைவு சரி­யாக குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­கின்­றது.

தமிழ்­மொழி தீர்­மான வரைவு நிகழ்ச்சி நிர­லில் எவ்­வ­கை­யில் பிழை ஏற்­பட்­ட­தென்று என­வும் சபை உறுப்­பி­னர் எம்.சச்­சி­தா­னந்­தன் வினா எழுப்­பி­னார்.

சபைத்­த­லை­வர் ஏ.எம்.புத்­த­தாச, தீர்­மான வரைவு நிகழ்ச்சி நிர­லில் தமிழ் மொழி பெயர்ப்­பில் பிழை ஏற்­பட்­டி­ருப்­பது உண்­மை­தான். சபைச் செய­லர் அலு­வ­ல­கத்­தி­னால் இந்­தப் பிழை ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இது போன்ற பிழை­கள் இனி­மேல் ஏற்­பட எவ்­வ­கை­யி­லும் அனு­ம­திக்க முடி­யாது. அத­னைப் பொருட்­ப­டுத்த வேண்­டாம். தங்­க­ளி­ட­மி­ருக்­கும் தீர்­மான வரை­வின் பிர­தி­யின் மூலம் தெளி­வுப்­ப­டுத்­து­மாறு கேட்­டுக்­கொள்­கின்­றேன், என்­றார்.

இதை­ய­டுத்து சபை உறுப்­பி­னர் எம்.சச்­சி­தா­னந்­தன் தம­து­ரை­யினை தமிழ் மொழி­யில் ஆற்ற முற்­பட்­டார். இதன்­போது சபை உறுப்­பி­னர் திஸ்ஸ குட்­டி­யா­ராய்ச்சி எழுந்து தமது மேசை­யில் மொழி பெயர்ப்பு ஒலி­வாங்கி பொறுத்­தப்­ப­டா­ம­லி­ருப்­ப­தால் தமி­ழில் உரை­யாற்­று­வது எம்­மால் புரிந்­து­கொள்ள முடி­ய­வில்லை. ஆகை­யி­னால் அவ் உறுப்­பி­னரை சிங்க மொழி­யில் உரை­யாற்­று­மாறு கேட்­டுக்­கொள்­கின்­றேன். தமிழ்­மொ­ழி­யி­னா­லான உரையை எம்­மால் புரிந்­து­கொள்ள முடி­ய­வில்லை. இத­னால் தமிழ் மொழி­யில் உரை­யாற்­று­வதை தவிர்க்­க­வும், என்­றார்.

எம்.சச்­சி­தா­னந்­தன், 13ஆவது திருத்­தச் சட்­டப் பிர­கா­ரம் தமிழ் மொழி­யில் எம்­மால் தீர்­மான வரைவு சமர்ப்­பிக்க முடி­யும். இதற்கு எவ­ரா­லும் எதிர்ப்பு தெரி­விர்க்க முடி­யாது. கடந்த மூன்­றரை வரு­ட­கா­ல­மாக இது போன்ற நிலை தொடர்ந்த வண்­ண­முள்­ளது. தமிழ் உறுப்­பி­னர்­கள் இது­வி­ட­யத்­தில் எதிர்ப்பு தெரி­விக்­கும் போது எமக்கு பட்­டர் பூசப்­ப­டு­கின்­றது.

எமக்கு கற்­பித்து கொடுக்க முன்­வ­ர­வேண்­டாம். எம் மக்­கள் எதிர்­நோக்­கும் பிரச்­சி­னை­களை இந்­தச் சபை­யில் தீர்­மான வரை­வா­கக் கொண்டு வந்து அவற்­றினை நிவர்த்தி செய்ய வேண்­டி­யது எமது கடமை. எமக்கு ஏற்­ப­டு­கின்ற புறக்­க­ணிப்­பி­னால் இந்­தச் சபை­யின் நிர்­வா­கக் குழு உறுப்­பி­னர் பத­வி­யி­லி­ருந்­தும் வில­கு­கின்­றேன் என்று கூறி­னார்.

இத­னை­ய­டுத்து சபை அமர்­வில் குழப்­பம் ஏற்­பட்டு சில மணித்­தி­யா­லங்­கள் ஒத்­தி­வைக்­கப்­பட்­டது. 

No comments

Powered by Blogger.