உணவக உரிமையாளர்களுடன் கலந்துரையாடல்!!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்கு உட்பட்ட அனைத்து உணவக உரிமையாளர்களுக்குமான
கலந்துரையாடல்  கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில், பிரதேச சபை செயலாளர் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதில் உணவு சுகாதார தன்மை,சமையலாளர்களின் சுகாதார முறைமைகள், கழிவகற்றும் முறைமைகள் தொடர்பில் உரிமையாளர்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டது.
அத்துடன்   2019ஆம் ஆண்டு நடை முறைப்படுத்தப்படவுள்ள தமிழ் மொழியிலான பெயர் நடைமுறை,  உணவகங்களுக்கு தரச்சான்றிதழ் வழங்கல் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.