அர­சின் நகர்­வு­கள் தமிழ் மக்­கள் விட­யத்­தில் மந்­தம்!

நாம் இந்த அர­சின் மீது நம்­பிக்கை இழந்து வரு­கின்­றோம். தமிழ் மக்­க­ளின் விட­யங்­க­ளில் அர­சின் நட­வ­டிக்­கை­கள் மிக மெது­வா­கவே நகர்­கின்­றன.

இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை சோ.சேனா­தி­ராசா.

திரு­கோ­ண­ம­லை­யில் உள்ள இலங்­கைத் தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் அலு­வ­ல­கத்­தில் தமி­ழ­கப் பத்­தி­ரி­கை­யா­ளர்­கள், சட்­டத்­த­ர­ணி­கள் மற்­றும் அர­சி­யக் கட்­சி­கள் குழா­முக்­கும், கிழக்கு மாகாண தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பிர­தி­நி­தி­க­ளுக்­கும் இடையே நேற்­று­முன்­தி­னம் சிநே­க­பூர்­வக் கலந்­து­ரை­யா­டல் நடை­பெற்­றது. அதில் கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.அவர் தெரி­வித்­தா­வது-,

முன்­னர் எம்­மி­டம் இரு போராட்ட சக்­தி­கள் இருந்­தன. ஒன்று விடு­த­லைப் புலி­க­ளின் ஆயுத பலம். மற்­றை­யது எமது மக்­க­ளின் வாக்­குப் பலம். அவற்­றில் ஒன்றை நாம் இழந்­துள்­ளோம். தற்­போது எம்­மி­டம் உள்ள மக்­கள் ஜன­நா­ய­கப் பலத்தை மட்­டுமே நம்­பி­யுள்­ளோம்.

இந்­திய அரசு இலங்­கைத் தமி­ழர் பிரச்­சினை தொடர்­பாக இலங்கை அர­சுக்கு அழுத்­தம் கொடுக்க வேண்­டும். எமக்­காக இந்­திய அரசு தொடர்ந்து குரல் கொடுக்க வேண்­டும் -–- என்­றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.