வட்­டுக்­கோட்­டை­யில் நாசகர மக்­கள் சேவை பணியாம்??

அரச தலை­வர் செய­ல­கத்­தால் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டும் மக்­கள் சேவை பணி நட­மா­டும் சேவை வட்­டுக்­கோட்டை இந்­துக் கல்­லூ­ரி­யில் நேற்று இடம்­பெற்­றது. பொது­மக்­கள் பலர் கலந்து கொண்­ட­னர்.

நட­மா­டும் சேவை­யில் உள்­நாட்­ட­லு­வல்­கள் அமைச்­சர் வஜிர அபே­வர்த்­தன, யாழ்ப்­பாண மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான ஈ.சர­வ­ண­ப­வன், எம்.ஏ.சுமந் தி­ரன், திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன், வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் பா.கஜ­தீ­பன், வலி­கா­மம் மேற்கு பிர­தேச சபை தவி­சா­ளர் த.நட­னேந்­தி­ரன், யாழ்ப்­பா­ணம் மாவட்­டச் செய­லர் நா.வேத­நா­ய­கன், மேல­திக மாவட்ட செய­லர் திரு­மதி சுகு­ண­ரதி தெய்­வேந்­தி­ரம், உதவி மாவட்­டச் செய­லர் எஸ்.சுதர்­சன், வலி­கா­மம் மேற்கு பிர­தேச செய­லர் திரு­மதி பொ.பிறே­மினி உள்­ளிட்­டோர் பங்­கேற்­ற­னர்.

நிகழ்­வில் உரை­யாற்­றிய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈ.சர­வ­ண­ப­வன், இந்த நட­மா­டும் சேவை மக்­க­ளுக்­குத் தேவை­யா­னது. அவர்­க­ளின் பல தேவை­களை இங்கே ஓரி­டத்­தில் நிறை­வேற்­றக் கொள்­ளக் கூடி­ய­தாக இருக்­கும். மாவட்­டச் செய­லர் தலை­மை­யி­லான அதி­கா­ரி­கள் இதற்கு முழு­மை­யான ஒத்­து­ழைப்பை வழங்­கு­கின்­றார்­கள். நட­மா­டும் சேவை ஊடாக யாழ்ப்­பா­ணத்­தில் இனங்­கா­ணப்­பட்ட இரண்டு லட்­சம் பிணக்­கு­க­ளில் ஒன்­றரை லட்­சம் பிணக்­கு­க­ளுக்கு தீர்வு காணப்­பட்­டுள்­ளது.

மேலும் அரசு அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்ள ‘என்­ர­பி­றைஸ் சிறி­லங்கா’ திட்­டத்தை எமது மக்­கள் உரிய வகை­யில் பயன்­ப­டுத்த வேண்­டும். சிறிய மற்­றும் நடுத்­தர வர்த்­த­கர்­கள், விவ­சா­யி­கள், பாட­சா­லை­கள், இளை­யோர், சுய­தொ­ழில் செய்­வோர் என்று எல்­லோ­ரும் இத­னைப் பயன்­ப­டுத்த முடி­யும். அர­சின் ஊடாக சலு­கை­யு­டன் வழங்­கப்­ப­டும் இதனை முழு­மை­யா­கப் பயன்­ப­டுத்­த­வேண்­டும் – என்­றார்.

இந்த நிகழ்­வில் கலந்து கொண்ட உள்­நாட்­ட­லு­வல்­கள் அமைச்­சர் வஜிர, அரச தலை­வர் மைத்­திரி மற்­றும் தலைமை அமைச்­சர் ரணி­லின் கூட்டு முயற்­சி­யி­னா­லேயே இவ்­வா­றான செயற்­பா­டு­கள் இடம்­பெ­று­கின்­றன.

மேலும் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால யாழ்ப்­பா­ணத்­துக்கு வரு­கை­த­ரும்­போது 2 ஆயி­ரத்து 600 மாற்­றுத் திற­னா­ளி­க­ளுக்கு பல உத­வி­களை வழங்­க­வுள்­ளார்.

வடக்­கில் 9 ஆயி­ரத்து 300 பேர் மாற்­றுத் திற­னா­ளி­க­ளாக உள்­ள­னர். இவர்­க­ளுக்­கும் உத­வி­கள் கிடைக்­கும். இந்த நட­மா­டும் சேவை­யில் அதி­கா­ரி­கள் ஒன்­றி­ணைந்து பணி­பு­ரி­வதை அவ­தா­னிக்­கக் கூடி­ய­தாக உள்­ளது – என்­றார்.

இந்த நிகழ்­வில் 20 பேருக்கு வாழ்­வா­தார உத­வி­கள் வழங்­கப்­பட்­டன. திரு­ம­ணம் செய்த இரு தம்­ப­தி­ய­ருக்கு திரு­ம­ணப் பதிவு மேற்­கொள்­ளப்­பட்டு சான்­றி­தழ் நேற்று வழங்­கப்­பட்­டது.

No comments

Powered by Blogger.