எமது இன அழிவுக்கு நாமே காரணம் !

போர் முடி­வ­டை­யும் வரை மதிப்­பா­க­வும் கண்­ணி­ய­மா­க­வும் வாழ்ந்த தமிழ் இனம் இன்று எங்­கேயோ சென்று கொண்டி ருக்­கின்­றது .இதற்கு வாள்­வெட்டு,குத்து,சண்டை,கஞ்சா ,கடத்­தல் போன்­றன கார­ண­மாக இருந்­தா­லும், மாற்­றான் திரை­ம­றை­வில் பல செயற்­பா­டு­களை செயற்­ப­டுத்­தி­னா­லும், நாங்­க­ளும் இதற்கு பாத்­தி­ர­வா­ளி­கள் என்­பதை ஏற்­றுக்­கொள்­ள­வேண்­டும். என்று வன்­னி­மா­வட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சாந்தி சிறீஸ்­கந்­த­ராசா தெரி­வித்­துள்­ளார்.

முள்­ளி­ய­வளை, தண்­ணீ­ரூற்று இந்து தமிழ்க் கல­வன் பாட­சா­லை­யின் பரி­ச­ளிப்பு நிகழ்­வில் நேற்று முன் தினம் முதன்மை விருந்­தி­ன­ராக கலந்­து ­கொண்டு உரை­யாற்­றும் போது அவர் இதனை தெரி­வித்­துள்­ளார்
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது :

போரில் நாங்­கள் இழந்­து­போ­ன­வை களையும் இன்­று­வரை அடிப்­படை தேவை­களையும் பூர்த்தி செய்­யா­த­வர்­க­ளாக இருக்­கின்­றோம்.

இந்த பாட­சா­லைக்­கான தேவை­கள் குறித்து பட்­டி­யல் இட்டு கொடுக்­கப்­ப­டு­மாக இருந்­தால் இயன்­ற­வரை அந்த தேவை­யினை என்­னால் நிவர்த்தி செய்து கொடுக்­க­மு­டி­யும். தண்­ணீ­ரூற்று கிரா­மத்­தில் இரண்டு வீதி­களை சீரமைப்பதற்குச் சிறப்­பாக ஒதுக்­கப்­பட்ட நிதி­யில் இருந்து 37 இலட்­சம் ரூபா ஒது க்கப்­பட்­டுள்­ளது.

இந்தபங பாட­சா­லை­யின் வீதி சீர மைப்பதற்குச் சிறப்பு நிதி ஒதுக்­கீடு செய்­யப்­ப­டு­கின்­றது. பாட­சா­லை­யின் கரை­யோ­ர­மாக உள்ள பாதை தார் போடு­வ­தற்கு ஒழுங்கு செய்­யப்­பட்­டுள்­ளது.

போர் முடி­வ­டைந்­த­தன் பின்­னர் முள்­ளி­வாய்க்­காலை மைய­மாக வைத்து வன்­னி­யினை நோக்கி பெரு­ம­ளவு நிதி வழங்­கப்­பட்­டா­லும் எங்­கள் பாட­சாலைப் பிள்­ளை­கள் ஓலைக் கொட்­ட­கை­யில் சீராக்­கப்­ப­ டாத வகுப்­ப­றை­யில் கல்வி கற்­பது மிக­வும் வேத­னைக்­கு­ரிய விட­யம்.

இந்தப் பிர­தே­சத்­தில் உள்ள பூதன்­வ­யல் பாட­சாலை தனது சொந்­தக் காணி­யில் கட்­ட­டம் கட்டி பிள்­ளை­ க­ளுக்கு கல்வி கற்க முடி­யாத நிலை யில் காணப்­ப­டு­கின்­றது. பொது மண்­ட­பத்­தில்­தான் இது­வரை கல்வி கற்று வரு­கின்­றார்­கள்.

அரச தலை­வர் அண்­மை­யில் எங்­க­ளு­டன் கலந்­து­ரை­யா­டும்போது ,பாட­சா­லைக் காணி­கள் அப­க­ரிக்­கப்­பட்டு இருந்­தால் அதனை உட­ன­டி­யாக விடு­விக்க முயற்சி செய்­வேன் என்று சொல்லி இருந்­தார். எதிர்­வ­ரும் 3 ஆம் திகதி அர­ச­த­லை­வ­ரு­டன் கலந்­து­ரை­யா­டல் இருக்­கின்­றது.

அந்­த­நே­ரத்­தில் பூதன் வயல் கிரா­மத்­தின் பாட­சாலைக் காணி தனி­யா­ரால் ஆக்­கி­ர­மிப்பு தொடர்­பான ஆதா­ரங்­களை அர­ச­த­லை­வ­ரி­டம் கைய­ளித்து விரை­வில் விடு­வித்து கொடுக்க நட­வ­டிக்கை எடுப்­பேன் என்­பதை இந்த வேளை­யில் தெரி­வித்­துக்­கொள்­கின்­றேன்.

போர் முடி­வ­டை­யும் வரை மதிப்­பா­க­வும் , கண்­ணி­ய­மா­க­வும் வாழ்ந்த இந்தத் தமிழ் இனம் இன்று எங்­கேயோ சென்று கொண்­டி­ருக்­கின்­றது. இதற்கு வாள்­வெட்டு, குத்­து, சண்டை, கஞ்சா கடத்­தல் போன்­றன கார­ண­மாக இருந்­தா­லும் மாற்­றான் திரை­ம­றை­வில் பல செயற்­பா­டு­களை செயற்­ப­டுத்­தி­னா­லும் நாங்­க­ளும் இதற்கு பாத்­தி­ர­வா­ளி­கள் என்­பதை ஏற்­றுக்­கொள்­ள­வேண்­டும்.

இன்­றைய காலத்­தில் பிள்­ளை­கள் தொலைக்­காட்­சி­யில் போகின்ற சமூ­கத்­திற்கு முர­ணான நாட­கங்­கள், தொலை­பே­சி­யில் பார்க்­கக்­கூ­டாத எத்­த­னையோ செயற்­பா­டு­களை பார்த்து விட்டே நித்­தி­ரைக்குப் போகின்­றார்­கள்.

இந்த நிலை மாற­வேண்­டும் ஒவ்­வொரு தாயும் தந்­தை­யும் இதனை மாற்­ற­வேண்­டும்
இன்று எங்­கள் காணி­கள் பறி­போ­கின்­றது. வளங்­கள் பறி­போ­கின்­றது. மக்­க­ளுக்கு குரல் கொடுப்­ப­தற்­காக தமிழ்ப் பிர­தி­நி­தி­கள் மட்­டும்­தான் மக்­க­ளி­டத்­தில் வரு­கின்­றார்­கள் என்­றும் அவர் தெரி­வித்­துள்­ளார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.