ரஜினியை சந்தித்த மகிழ்ச்சியில் மேகா ஆகாஷ்!

ஒரு பக்க கதை படத்துக்காக முதலில் ஒப்பந்தம் ஆனவர் மேகா ஆகாஷ். அந்த படம் வெளியாவதற்குள் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, ‘பூமராங்’ என 2 படங்களில் நடித்துவிட்டார்.

அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘பேட்ட’ படத்தில் ஒரு வேடத்தில் நடித்து வருகிறார். ரஜினியால் காப்பாற்றப்படும் இளம் ஜோடியாக நடித்திருக்கும் மேகா ஆகாஷ் ரஜினியுடன் பங்கேற்கும் காட்சிகள் நேற்று முதல் படமாக்கப்பட்டு வருகின்றன.

அப்போது ரஜினியுடன் எடுத்துக்கொண்ட படத்தை பகிர்ந்து இருக்கும் மேகா ஆகாஷ், என் கனவுகள் நிறைவேறிவிட்டன. நட்சத்திரத்தின் அருகில் நிற்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். 
Powered by Blogger.