அரபு வசந்­தம் இறு­தி­யில் அரக்கு வசந்­த­மா­னது!

அரபு வசந்­தம் பாணி­யில் போராட்­டம் நடத்­தப்­பட்­டுக் கொழும்பு முற்­று­கை­யி­டப் படும் என்று சூளு­ரைத்த அணி­யி­னர் இறு­தி­யில் “அரக்கு வசந்­தய” (சாராய வசந்­தம்) போராட்­டத்­தையே நடத்தி முடித்­துள்­ள­னர்.

இவ்­வாறு ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் கொழும்பு மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் முஜி­பூர் ரஹ்­மான் கிண்­ட­ல­டித்­துள்­ளார்.

நாடா­ளு­மன்­றில் நேற்று கணக்­காய்­வா­ள­ரின் சம்­ப­ளத்தை அதி­க­ரிப்­பது தொடர்­பான பிரே­ரணை மீது நடந்த விவா­தத்­தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் தெரி­வித்­த­தா­வது-,

கொழும்­பைச் சுற்­றி­வ­ளைக்க அணி­தி­ரண்டு வரு­வோம் என்று அறை­கூ­வல் விடுத்­த­வர்­களை நாம் போரா­ளி­கள் என்றே கரு­தி­னோம். 6ஆம் திகதி சிறை­யில் இருப்­பார்­கள் என்று நினைத்­தோம். ஆனால் போராட்ட வீரர்­கள் குடித்­துக் கூத்­த­டித்­து­விட்டு இறு­தி­யில் மருத்­து­வ­ம­னை­க­ளில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர். போரா­ளி­கள் என்று சூளு­ரைத்­த­வர்­கள் திரு­நங்­கை­க­ளா­கி­யுள்­ள­னர்.

அரபு வசந்­தம் பற்­றிப் பேசிக்­கொண்டே வந்­தார்­கள். இறு­தி­யில் சாராய வசந்­தத்­து­டன் முடித்­துக் கொண்­ட­னர். என்­மீது பழி­சு­மத்­தப் பல கதை­கள் கூறு­கின்­ற­னர். கலா­வ­தி­யான பால் பைக்­கற்­றுக்­களை வழங்­கி­விட்டு இப்­போது எம்­மீது குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைக்­கின்­ற­னர்.

கொழும்­பைச் சுற்­றி­வ­ளைக்க அங்கு வாழும் மக்­க­ளின் ஆத­ரவு அவ­சி­யம். கொழும்பு மக்­கள் உண்­மையை அறிந்து அமை­தி­யாக இருந்­த­தால் தான் இவர்­க­ளால் மீண்­டும் கொழும்பை விட்டு வெளி­யேற முடிந்­தது. கொழும்பு மக்­கள் கிளர்ந்­தெ­ழுந்­தி­ருந்­தால் போராட்­டக்­கா­ரர்­க­ளால் பேலி­ய­கொ­டைச் சந்­தி­யைத் தாண்­டி­யி­ருக்க முடி­யாத நிலை ஏற்­பட்­டி­ருக்­கும்.- என்­றார்.

No comments

Powered by Blogger.