பௌத்த மதத்­துக்­கான முன்­னு­ரிமை மாறாது!

பௌத்த மதத்­துக்கே முன்­னு­ரிமை அளிக்க்­ப­ப­டும். புத்­த­சா­ச­னத்­தைப் பாது­காப்­ப­தில் அரசு உறு­தி­யா­கவே உள்­ளது.

இவ்­வாறு தெரி­வித்­தார் தேசிய கொள்­கை­கள் மற்­றும் பொரு­ளா­தார அலு­வல்­கள் இரா­ஜாங்க அமைச்­ச­ரான நிரோ­சன் பெரேரா.

நேற்று நாடா­ளு­மன்­றில் வாய்­மூல விடைக்­கான கேள்வி நேரத்­தில் ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் உதய கம்­மன்­பில எழுப்­பிய கேள்­விக்­குப் பதி­ல­ளிக்­கும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.

பௌத்த மதம் தொடர்­பில் அர­ச­மைப்­பில் உள்ள இரண்­டா­வது அத்­தி­யா­யத்தை உள்­ள­வாறே பேணு­மாறு மக்­கள் கருத்­த­றி­யும் குழு­வில் உள்ள 19 உறுப்­பி­னர்­க­ளில் இரு­வர் மாத்­தி­ரமே கருத்­துத் தெரி­வித்­துள்­ள­னரே என்று உதய கம்­மன்­பில கேள்வி எழுப்­பி­னார்.

அதற்கு இரா­ஜாங்க அமைச்­சர் நிரோ­சன் பெரேரா பதி­ல­ளித்­தார்.
பௌத்த மதத்­துக்­கு­ரிய முன்­னு­ரிமை தற்­போது உள்­ள­து­போன்று அப்­ப­டியே இருக்­கும். அதில் மாற்­றம் வராது. ஆனால் ஏனைய மதங்­க­ளுக்­கு­ரிய உரி­மை­க­ளை­யும், சுதந்­தி­ரத்­தை­யும் பாது­காப்­போம்.

தற்­போது பௌத்த மதம் பற்­றிப் பேசு­ப­வர்­கள் தலதா மாளி­கைக்கு அரு­கில் கார் ரேஸ் நடத்­தப்­பட்­ட­போது மௌனம் காத்­தமை வருத்­த­ம­ளிக்­கின்­றது.

கொழும்­பைக் கைப்­பற்­று­வோம், சுற்­றி­வ­ளைப்­போம் என்று சூளு­ரைத்­த­வர்­க­ளால் லேக் ஹவுஸ் சுற்­று­வட்­டத்தை மாத்­தி­ரமே சுற்­றி­வ­ளைக்க முடிந்­தது. அந்­தக் கவ­லை­யால், தோல்­வி­யால் இப்­போது வேறு விட­யங்­க­ளைப் பற்­றிக் கதைக்­கின்­ற­னர்.- என்­றார். 

No comments

Powered by Blogger.