பிரான்ஸ் கடற்பரப்பிலிருந்து ஆறு அகதிகள் மீட்பு!

பிரான்சின் பா-து-கலே பிராந்திய கடல் எல்லையிலிருந்து ஆறு அகதிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

இன்று(வெள்ளிக்கிழமை) காலை பா-து-கலேயின் Audinghen பகுதி கடலிலிருந்து பிரித்தானியா நோக்கி பயணிக்க முயன்ற அகதிகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.

National Society of Sea Rescue (SNSM) மீட்புப்படையினராலேயே இந்த அகதிகளை மீட்கப்பட்டுள்ளனர்.

26 வயதில் இருந்து 51 வயது வரையான ஈரானிய குடியுரிமை கொண்ட அகதிகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் Boulogne-sur-Mer பகுதி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, கடந்த 2016ஆம் ஆண்டு இதுபோன்று படகில் செல்ல முற்பட்டதாக 36 வழக்குகளும், 2017 இல் 13 முயற்சிகளும், 2018 இல் இதுவரை 10 முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.