வட மாகாண சபை வினைதிறனுடன் செயற்பட வேண்டும்!

வடக்கில் எதிர்வரும் காலங்களில் அமையவுள்ள மாகாண சபை தற்போதுள்ள மாகாண சபையை பார்கிலும் கூடுதல் வினைதிறனுடன் செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

யாழ்.அச்சுவேலி புனித திரேசாள் மகளீர் கல்லூரியில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் வைத்தே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் திட்டத்தின் கீழ் யாழ். அச்சுவேலி புனித திரேசாள் மகளீர் கல்லூரியில் புதிய வகுப்பறைக் கட்டிடங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டன.

சுமார் 2. 7 மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்பட்ட புதிய கட்டிடங்களை கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன் இதன்போது திறந்து வைத்தார்.

தொழில்நுட்பகூடக் கட்டிடத் தொகுதி மற்றும் ஆரம்ப பிரிவு கற்றல் வள நிலைய கட்டிடத் தொகுதி ஆகியவையே இவ்வாறு திறந்து வைக்கப்பட்டுள்ளன.

பாடசாலை அதிபர் அருட்சகோதரி மரிய ஜீவந்தி தலைமையில் இதற்கான நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில், வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் அமைச்சர் சர்வேஸ்வரன், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.