ஐ.தே.க. விரைவில் புதிய தலைமைத்துவத்திடம் ஒப்படைக்கப்படும்

வலுவான தலைவர்களுடன் செயற்பட்டுவரும் ஐக்கிய தேசிய கட்சி விரைவில் புதிய தலைமைத்துவத்திடம் ஒப்படைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கி;ய தேசியக் கட்சியின் 72ஆவது ஆண்டுவிழா, பிரதமர் தலைமையில் கட்சி தலைமை அலுவலகமான சிறிகொத்தவில்  (வியாழக்கிழமை) நடைபெற்றது.

கட்சியின் ஆண்டு நிறைவு விழாவில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

புதிய தலைமைத்துவத்தை உருவாக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர், 2030ஆம் ஆண்டளவில் புதிய தலைமைத்துவத்திடம் கட்சி ஒப்படைக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வலுவான தலைவர்களை கொண்டு செயற்பட்டுவரும் ஐக்கிய தேசியக் கட்சியை எவராலும் அழிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

மேலும், 2015ஆம் ஆண்டு தாம் ஆட்சியை பொறுப்பேற்கும் போது தமக்கு பயிரிட முடியாத வரண்ட நிலமே கிடைத்ததாகவும், அதனை தாம் தற்போது வளப்படுத்தி உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.