மட்டக்களப்பில் சிறைச்சாலை கூரைமீது ஏறி கைதி போராட்டம்!

மட்டக்களப்பில் சிறைச்சாலை கட்டிட கூரை மீது ஏறி கைதி ஒருவர் தன்னை விடுதலை செய்யுமாறு கோரி (வியாழக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றார்.
திருகோணலையைச் சேர்ந்த 21 வயதுடைய யோகராசா லஷ்சன் என்ற கைதியே இவ்வாறு போராட்டத்தை மேற்கொண்டுள்ளார்.
வாகரை பிரதேசத்தில் 15 வயது சிறுமியை பலாத்தகாரம் செய்தமை மற்றும் கொள்ளைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சம்பவங்களுடன் கைது செய்யப்பட்டு அவருக்கு 6 மாதகால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த கைதி தன்னை பிணையில் விடுவிக்கவேண்டும் என கோரி இன்று மாலை சிறைச்சாலை கூரை மீது ஏறி தன்னை தானே காயப்படுத்திய நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றார்.
இதனையடுத்து அவரை கூரையிலிருந்து இறக்கும் முயற்சியில் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிசார் ஈடுபட்டுவருகின்றனர்.

No comments

Powered by Blogger.