கட்­சி சார்­பற்று இயங்­கும் பொது­வேட்­பா­ளரே தேவை!

நாட்டுக்குப் பொது வேட்­பா­ளர் ஒரு­வரே மீள­வும் தேவை  என சமூக நீதிக்­கான தேசிய அமைப்­பின் அழைப்­பா­ளர் பேரா­சி­ரி­யர் சரத் விஜே­சூ­ரிய தெரி­வித்­தார்.

கொழும்­பில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் கலந்து கொண்டு கருத்துத் தெரி­விக்­கும் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:

நாட்டுக்கு மீள­வும் அரச தலை­வர் வேட்­பா­ள­ராகப் பொது வேட்­பா­ளர் ஒரு­வரை நிய­மிக்க வேண்­டிய அவ­சி­யம் எழுந்­துள்­ளது. கட்சி சார்­பற்ற ஒரு­வரே இவ்­வாறு பொது வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­பட வேண்­டும்.

2015ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 8ஆம் திகதி வெற்­றி­யீட் டிய பொது வேட்­பா­ளர், கட்சி சார்­பா­ன­வர் என்ற கார­ணத்­தி­னால் மக்­க­ளின் விருப்­பங்­களை நிறை­வேற்­ற­வில்லை. எனவே கட்சி சார்­பற்ற பொது வேட்­பா­ளர் ஒரு­வரை நிய­மிக்க வேண்­டிய அவ­சி­யம் எழுந்­துள்­ளது.

பல்­வேறு குற்­றச்­செ­யல்­கள், மோச­டி­க­ளு­டன் தொடர்­பு­டை­ய­வர்­களைக் கைது செய்­யும் போது தற்­போ­தைய அரச தலை­வர் அலை­பேசி அழைப்­புக்­களை மேற்­கொள்­கின்­றார். இதன் மூலம் அவ­ரது நடு­நி­லைத்­தன்மை பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

தலைமை அமைச்­சர் அரச நிர்­வா­கத்­தின் உயர் பத­வி­க­ளில் தனது நெருங்­கிய நண்­பர்­களை அமர்த்­தி­யுள்­ளார். இத­னால் மக்­க­ளின் தேவை­களை நிறைவு செய்ய முடி­யாத நிலமை உரு­வா­கி­யுள்­ளது. ஓய்­வூ­தி­யம் பெற்­றுக்­கொள்­ளாத, வாகன அனு­ம­திப் பத்­தி­ரம் பெற்­றுக் கொள்­ளாத, கட்சி சார்­பற்ற ஒரு பொது வேட்­பா­ளர் நிறுத்­தப்­பட வேண்­டும். மறைந்த சோபித தேர­ரின் அணு­கு­மு­றைக்கு அமைய இவ்­வா­றான வேட்­பா­ளர் ஒரு­வர் உரிய நேரத்­தில் அறி­விக்­கப்­ப­டும்– என்­றார். 

No comments

Powered by Blogger.