அரச துறையை எதிர்­பார்க்­காது தனி­யார் துறை­க­ளில் இணைக!

யாழ்ப்­பா­ணத்­தில் உயர்­த­ரம் படித்­த­வர்­கள் 14 ஆயி­ரம் பேர் உள்­ள­னர் எனில் அவர்­கள் அனை­வ­ருக்­கும் வேலை வாய்ப்பு வழங்க முடி­யாது. தற்­போது ஆண்­டின் அரை­வாசி நாள்­கள் விடு­முறை நாள்­க­ளாகவே உள்­ளன.

உண்­மை­யில் திற­மை­யான ஒரு­வர் அரச துறை­யில் இணைந்து பணி­யாற்­றிப் பெறும் சம்­ப­ளத்தை விட தனி­யார் துறை­யில் இணைந்து திற­மையை நிரூ­பித்­தால் அதிக சம்­ப­ளம் பெற முடி­யும். எனி­னும் அனை­வ­ரும் அரச துறை­யையே எதிர்­பார்க்­கின்­ற­னர்.

இவ்­வாறு தொழில் மற்­றும் தொழிற்­சங்க உற­வு­கள் அமைச்­சர் ரவீந்­திர சம­ர­வீர தெரி­வித்­தார்.
தொழில்­துறை, மனி­த­வலு வேலை வாய்ப்பு அமைச்­சின் அலு­வ­ல­கம் நேற்று யாழ்ப்­பா­ணத்­தில் திறக்­கப்­பட்­டது. தொழில் மற்­றும் தொழிற்­சங்க உற­வு­கள் அமைச்­சர் ரவீந்­திர சம­ர­வீர தலை­மை­யில் இந்த நிகழ்வு நடை­பெற்­றது.

யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கத்­தின் கட்­ட­டத் தொகு­தி­யில் இந்த அலு­வ­ல­கம் திறக்­கப்­ப ட்­டுள்­ளது.குடா­நாட்­டில் உள்ள இளை­யோர்­கள் இங்கே பதி­யப்­ப­டும் வேலை­வாய்ப்­புக் கோரும் விவ­ரம் இணை­யம் மூலம் தர­வேற்­றம் செய்­யப்­பட்டு வெற்­றி­டம் உள்ள தக­வல்­களை உரிய விண்­ணப்­ப­ தா­ரி­க­ளுக்­கும் பணி­யா­ள­ரைக் கோரு­வோ­ருக்­கும் வழங்­க­வும் வசதி வாய்ப்பு ஏற்­ப­டுத்­தப்­ப­டும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

பதி­வு­களை மேற்­கொள்­ளும் அனை­வ­ருக்­கும் குடா­நாட்­டில் வேலை வாய்ப்­புள்ள அரச மற்­றும் தனி­யார் துறை விவ­ரங்­களை அலை­பே­சி­க­ளுக்­குத் குறுந்­த­க­வல் மூலம் அனுப்­பு­வ­தற்­கான ஏற்­பா­டு­க­ளும் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது. நிகழ்­வில் உரை­யாற்­றும்­போதே அமைச்­சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார். அவர் தெரி­வித்ததாவது;-

அரச துறை­யில் ஓய்­வூ­தி­யம் பெற முடி­யும். ஆனால் ஒரு மாவட்­டச் செய­லர் பெறும் மொத்­தச் சம்­ப­ளத்தை விட அதி­க­மாகத் தனி­யார் துறை­யில் உழைக்­கின்­ற­னர். ஆனால் அது பல­ருக்­குத் தெரி­வ­தில்லை. தனி­யார் துறையை விரும்­பா­த­ வர்­கள் சுய­தொ­ழி­லில் ஈடு­ப­ட­லாம். இன்று தனி­யார் துறை­யில் அதிக வேலை வாய்ப்­புக்­கள் உள்­ளன.

30 ஆண்டு காலப் போரால் அழி­வ­டைந்த தொழிற்­சா­லை­க­ளைச் சிர­மைப்­ப­தில் சில அர­சி­யல் நெருக்­க­டி­க­ளும் உள்­ளன. யாழ்ப்­பாண மாவட்­டத்­தைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கு குறிப்­பிட்­ட­ளவு பணம் வெளி­நா­டு­க­ளில் இருந்து வரு­கின்­றது. அவற்­றைக் கொண்டு ஆடம்­பர வாழ்வு வாழ்­வதை விடுத்து அந்­தப் பணத்­தில் சுய­தொ­ழில் முயற்­சி­களை ஆரம்­பித்து சொந்­தக் காலில் நிற்க வேண்­டும் – என்­றார்.

#Raventhira-samarveera   #jaffna  #srilanka   #tamilnews  
Powered by Blogger.