ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைவதை கட்டுப்படுத்த தயார்!

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சியடைவதை கட்டுப்படுத்துவதற்கான தலையீடுகளை மேற்கொள்ள தயார் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுநரான கலாநிதி நந்தலால் வீரசிங்க இதனைத் தெரிவித்துள்ளர்.

நிதி சந்தையில் இதுபோன்ற மாறுபட்ட நிலைமை தொடர்ச்சியாக நீடிக்க இடமளிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இந்த நிலைமையை மாற்றுவதற்கும், நாணயமாற்றின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கும், அவசியம் ஏற்படின் மத்திய வங்கி சில கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசாமி தெரிவித்துள்ளார்.  
Powered by Blogger.