‘சீமராஜா’வுக்கு வந்த நல்ல தீர்ப்பு!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள சீமராஜா படத்தை சட்டவிரோதமாக இணையதளங்கள் வெளியிடுவதற்குத் தடை விதித்து சென்னை
உயர்நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 10) உத்தரவிட்டுள்ளது.
இயக்குநர் பொன்ராம் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகியுள்ள மூன்றாவது திரைப்படம் சீமராஜா. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இவர்களுடன் சூரி, நெப்போலியன், சிம்ரன், லால், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, யோகி பாபு எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இதற்கு பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்துள்ளார். 24 AM ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.
தற்போதுள்ள சூழலில் ஒரு படம் ரிலீஸான அன்றே இணையதளங்களில் வெளியாகிவிடுகிறது. இதற்கு விதி விலக்காக சில திரைப்படங்களும் அமைகின்றன. அந்த வகையில் காலா, ஒரு கிடாயின் கருணை மனு போன்ற திரைப்படங்கள் வெளியாகி ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகே இணைய தளங்களில் உலா வந்தன.
இது போன்ற சூழல் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற நோக்கில், சீமராஜா படத்தின் தயாரிப்பாளரான ‘24 ஏஎம் ஸ்டுடியோஸ்’ ஆர் டி ராஜா தொடர்ந்த வழக்கில்,
“இப்படத்தை இணையதள சேவை நிறுவனங்கள் மூலம் சுமார் 3500 சட்டவிரோத இணையதளங்களில் வெளியிட வாய்ப்புள்ளது. இவ்வாறு வெளியிடும் போது பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும். எனவே இதுபோன்ற சட்ட விரோதமாக இணையதளங்களில் படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும்” என்று தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி வாதிட்டார். இந்த மனு நீதிபதி சுந்தர் முன்பு இன்று (செப்டம்பர் 10) விசாரணைக்கு வந்தபோது இணையதள சேவை நிறுவனம் மூலம் சட்டவிரோதமான இணையதளங்களில் படத்தை வெளியிடக்கூடாது என்று

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.