இணையத்தைக் கலக்கும் தமிழ் அர்ஜுன் ரெட்டி!

துருவ் விக்ரம் நடிக்கும் வர்மா படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றுவருகிறது.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் முன்னதாக தெலுங்கில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம் அர்ஜுன் ரெட்டி. அதைத் தற்போது துருவ் விக்ரமை வைத்து வர்மா எனும் படமாக ரீமேக் செய்து வருகிறார் இயக்குநர் பாலா. மேகா செளத்ரி கதாநாயகியாக நடிக்கும் இதில் ஈஸ்வரி ராவ், பிக் பாஸ் புகழ் ரைஸா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ரதன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். வைரமுத்து பாடல் எழுதியுள்ளார். துருவ் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில் இப்படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
வழக்கமாக கலர்ஃபுல் காட்சிகளைத் தவிர்க்கும் பாலா, கடைசியாக தான் இயக்கிய நாச்சியார் படத்தில்தான் ஃபிரேமில் கொஞ்சம் கலர் கூட்டியிருந்தார். அந்தவகையில் இந்தப்படமும் கலர்ஃபுல்லாக இருக்கும் என இந்த டீசர் உறுதிபடுத்துகிறது. 1.08 நிமிடம் ஓடக்கூடிய இந்ததுருவ்வின் தோற்றம், நடிகர்களின் அறிமுகம், ஒளிப்பதிவைப் போலவே சிறப்புக் கவனம் பெறும் மற்றொரு சிறப்பம்சம் ரதனின் பின்னணி இசை. இந்தப் படத்தை E4 என்டெர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

No comments

Powered by Blogger.