ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படவிட்டால் பாரிய அழிவை அமெரிக்கா சந்தித்திருக்கும்!

அமெரிக்க ஜனாதிபதியாக தாம் தேர்ந்தெடுக்கப்படவிட்டிருந்தால், பல இலட்சம் உயிர்களை போரால் இழந்திருக்க வேண்டியிருக்கும் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. சபையின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்து கருத்து தெரிவித்த போதே ட்ரம்ப் இவ்வாறு கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி ஒபாமா, வடகொரியாவுக்கு எதிராக எந்நேரமும் போர் எனும் துப்பாக்கி விசையை அழுத்தத் தயாராக இருந்ததார்.

இந்நிலையில் தான் ஜனாதிபதியாக தீர்வு செய்யப்பட்டதன் பின்னர் அடுத்து போர் தவிர்க்கப்பட்டு சுமுக சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும் தாம் தேர்தலில் வென்றதாலேயே அமெரிக்காவில் பல லட்சம் உயிர்கள் போரால் இறக்கும் சூழல் தடுக்கப்பட்டுள்ளதாகவும் பெருமிதமடைந்தார். 

No comments

Powered by Blogger.