சீனாவுடனான நட்பு முறிவடைந்துவிட்டது!

சீனாவின் ஜனாதிபதியுடனான நட்பு முடிவுக்கு வந்து விட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

நியூயோர்க்கில்  (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

சீனாவின் வர்த்தகத்துக்கு சவாலாக இருந்த முதல் அமெரிக்க ஜனாதிபதி தாம் என்பதால், அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் தமது கட்சி பின்னடைவைச் சந்திக்க வேண்டும் என சீனா விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் தமது அரசின் செல்வாக்கை சீர்குலைப்பதற்கு சீனா பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாகவும், அதற்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதனால், ஜி ஜின்பிங்குடனான உறவு நிரந்தரமாகவே  முறிந்துவிடும் அளவுக்கு மோசமடைந்திருப்பதாகவும் அவர் இதன்போது கூறினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.