கர்ப்பிணியின் வயிற்றை கிழித்து குழந்தையை வெளியில் எடுத்த காதல்!

அமெரிக்காவில் குழந்தை வேண்டும் என்பதற்காக நிறைமாத கர்ப்பிணியின் வயிற்றை கிழித்து குழந்தையை வெளியில் எடுத்துள்ள கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த Savanna Greywind என்ற 22 வயது பெண்ணின் சடலமானது கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதியன்று North Dakota பகுதியில் உள்ள நதி அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்டது.
பின்னர் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொலிஸார், Savanna-வின் பக்கத்து வீட்டை சேர்ந்த Brooke Crews மற்றும் அவருடைய காதலர் William Hoehn என்ற இருவரையும் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து இருவரிடமும் நடத்தப்ட்ட விசாரணையில், Savanna-வின் வயிற்றை கிழித்து குழந்தையை வெளியில் எடுத்ததாக Brooke தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டார்.

ஆனால் அவருடைய காதலன் William கூறுகையில், அன்றைய தினம் நான் வீட்டிற்கு சென்ற போது, என்னுடைய காதலி பாத்ரூமில் ரத்தத்தை சுத்தம் செய்தார்.
திடீரென ஒரு குழந்தையை கொண்டு வந்து, இனிமேல் இது தான் நம்முடைய குடும்பம் என கூறியதாக தெரிவித்தார்.
மேலும், தன்னுடைய காதலி கொலை செய்ததே தனக்கு தெரியாது என பொய் வாக்குமூலம் கொடுத்தார்.

இந்த நிலையில் William வீட்டில் சோதனை மேற்கொண்ட பொலிஸார், அங்கிருந்த கயிற்றினை கைப்பற்றி டிஎன்ஏ சோதனை மேற்கொண்டனர். அதில் கயிற்றை கொண்டு Savanna-வின் கழுத்தை William நெரித்திருப்பது உறுதியாகியுள்ளது.
முன்னதாக வயிற்றை கிழித்து குழந்தை வெளியில் எடுத்த குற்றம் தொடர்பாக,ஜாமீனில் வெளிவராதபடி Brooke-க்கு ஆயுள் தண்டை பிப்ரவரி மாதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.