லெப்.கேணல் சுபன் உட்பட்ட 8 மாவீரர்களி​ன் 26ம் ஆண்டு நினைவு நாள்

பூநகரியில் காவியமான மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபன் உட்பட்ட ஏழு மாவீரர்களினதும் மட்டக்களப்பில் காவியமான வீரவேங்கை இந்துஜன் என்ற மாவீரரினதும் 26ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
25.09.1992 அன்று பூநகரி பள்ளிக்குடா பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைகளின் இரு மினி முகாம்கள் மற்றும் 62 தொடர் காவலரண்கள் தாக்கியழிக்கப்பட்ட சமரில்

மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபன் (வினாசித்தம்பி சுந்தரலிங்கம் - இலுப்பைக்கடவை, மன்னார்)

லெப்டினன்ட் தமிழேஸ்வரன் (கார்த்திகேசு யோகேஸ்வரன் - துன்னாலை, யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் அறிவுடையான் (செல்லையா உதயகுமார் - பல்லவராயன்கட்டு, கிளிநொச்சி)

லெப்டினன்ட் இயல்வாணன் (சுமன்) (முருகேசு வரதராஜன் - துணுக்காய்முல்லைத்தீவு)

2ம் லெப்டினன்ட் பன்னீர்ச்செல்வன் (சாந்தியாப்பிள்ளை அல்போன்ஸ்டானியல் - தலைமன்னார், மன்னார்)

2ம் லெப்டினன்ட் சுருளி (நவரட்ணம ரவி - மூதூர், திருகோணமலை)

வீரவேங்கை வெடியரசன் (இராமப்பிள்ளை மகாலிங்கம் - பூநகரி, கிளிநொச்சி)

ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

இம் மாவீரர்களினதும் இதேநாள் மட்டகளப்பு மாவட்டம் இடைக்காடு பகுதியில் முற்றுகை நடவடிக்கைக்கு வந்த படையினர் மீதான தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிய

வீரவேங்கை இந்துஜன் (றோமியோ) (தவராசா உதயகுமார் - சிறியபுல்லுமலை, மட்டக்களப்பு)

என்ற மாவீரரினதும் 26ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

No comments

Powered by Blogger.