சென்னை, கோவைக்கு சரக்குக் கட்டணம் குறைப்பு!

டெல்லியிலிருந்து பல மாநிலங்களுக்கான சரக்குக் கட்டணம் ரூ.1,000 வரை குறைக்கப்பட்டுள்ளது.
டெல்லியிலிருந்து மற்ற மாநிலங்களுக்கு லாரி டிரக்குகளில் அனுப்பப்படும் 9 டன் பிரிவுக்கான சரக்குக் கட்டணங்கள் செப்டம்பர் 15ஆம் தேதி ரூ.1000 வரை குறைக்கப்பட்டுள்ளது. டிரக்குகள் அதிகளவில் கிடைப்பதாலும், சரக்கு இயக்கங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாலும்தான் பல பகுதிகளுக்கு சரக்குக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
இதன்படி சென்னை, கோவை, திருவனந்தபுரம், மும்பை, கொல்கத்தா, கோவா, ஹைதராபாத், மைசூர் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கான சரக்குக் கட்டணம் ரூ.1,000 குறைக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு ரூ.65,000, கோயம்புத்தூருக்கு ரூ.72,000, மும்பைக்கு ரூ.25,000, கொல்கத்தாவுக்கு ரூ.33,000 புதிய கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோவாவுக்கு ரூ.58,000, ஹைதராபாத்துக்கு ரூ.56,000, மைசூருக்கு ரூ.66,000 புதிய கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மற்ற பகுதிகளுக்கான கட்டண நிலவரம்: ஜெய்பூர்-ரூ.18,000, சண்டிகர்-ரூ.19,000, விஜயவாடா- ரூ.60,000, லூதியானா- ரூ.21,000, பெங்களூரு- ரூ.63,000, கான்பூர்- ரூ.22,000, இந்தோர்- ரூ.23,000, அகமதாபாத்- ரூ.23,000, புதுச்சேரி- ரூ.67,000, பாட்னா- ரூ.28,000, கொச்சி ரூ.75,000, சூரத்- ரூ.27,000, திருவனந்தபுரம்- ரூ.82,000, புனே- ரூ.31,000, குவாலியர்- ரூ.15,000, கவுகாத்தி- ரூ.59,000, பரோடா- ரூ.25,000

No comments

Powered by Blogger.