கோலியின் உலக சாதனை!

இந்திய அணியின் விராட் கோலி புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு
இடையே ஓவல் மைதானத்தில் 5ஆவது டெஸ்ட் போட்டி நடந்துவருகிறது. இந்நிலையில் இந்தபோட்டியில் விளையாடிவரும் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிவேகமாக 18,000 ரன்களைக் கடந்தவர் எனும் புதிய சாதனையைப் படைத்துள்ளார். இவர் இதை வெறும் 311 போட்டிகளிலேயே பெற்றுள்ளார்.
இந்தப் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸ் 434 போட்டிகளுடன் 5ஆவது இடத்தில் இருக்கிறார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரிக்கி பாண்டிங் 422 போட்டிகளுடன் 4ஆவது இடத்திலும், இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 412 போட்டிகளுடன் 3ஆவது இடத்திலும்,வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிரையன் லாரா 411 போட்டிகளுடன் 2ஆவது இடத்திலும் உள்ளனர். முதல் இடத்தில் இருந்துவந்த லாராவின் இடத்தை கோலி அடைந்துள்ளார்.
அதே நேரம் மிக இளவயதிலேயே 18000 ரன்களைக் கடந்த வீரர் எனும் பட்டியலில் சச்சினே தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார். 28 வயது 223 நாட்களில் இதை நிகழ்த்தியுள்ளார் சச்சின். கோலியோ 29 வயது 306 நாட்களில் இதை நிகழ்த்தி 2ஆவது இடத்தில் உள்ளார். பாண்டிங், காலிஸ், டி வில்லியர்ஸ் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
இந்தியாவைப் பொறுத்தவரை சச்சின், கங்குலி, திராவிட், கோலி ஆகியோர் மட்டுமே 18000 ரன்களைக் கடந்துள்ளனர். இவர்களில் கோலியின் சராசரியே அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது

No comments

Powered by Blogger.