மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஆதிக்கின் படம்!

நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் வெளியாகியுள்ளன.
இசையமைப்பதுடன் படங்களில் நடிப்பதிலும் பிஸியாக இயங்கிவரும் ஜி.வி.பிரகாஷின் கைவசத்தில் தற்போது உள்ள படங்கள் எண்ணிக்கை ஏராளம். இந்த நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படத்திலும் அவர் நடிக்கிறார். தற்போது இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் வெளியாகியுள்ளன. அதன்படி படத்துக்கு 'காதலைத்தேடி நித்யா நந்தா' எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
யூத்துகளின் பல்ஸை நன்றாக அறிந்து ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ எனும் வடிவேலுவின் வசனத்தைத் தனது முதல் படத்தின் டைட்டிலாக வைத்துக் கவனம் ஈர்த்த ஆதிக், ‘AAA’ எனும் பெயர் வரும்படியாக ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ எனும் சர்ச்சைக்குரிய பெயரை இரண்டாவது படத்தின் டைட்டிலாக வைத்திருந்தார். அவ்வரிசையில் இப்போதோ சர்ச்சைக்குரிய சாமியாராக அறியப்படும் நித்யானந்தாவின் பெயரை மறைமுகமாகக் காட்டுவதுபோல ‘காதலைத் தேடி நித்யா நந்தா’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
அமைரா தஸ்தூர், சோனியா அகர்வால், சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்துக்கு அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்கிறார். விஷன் ஐ மீடியா சார்பில் தினேஷ் கார்த்திக் தயாரிக்கிறார். ஹாரர் வகை படம் எனக் கூறப்படும் இந்தப் படம் 3டி ஆக வெளிவரவிருக்கிறது.

No comments

Powered by Blogger.