ஈழ ஏதிலி சிட்னி விபத்­தில் நேற்­றுச் சாவு!

ஆஸ்­தி­ரே­லி­யா­வின் சிட்னி, பெண்­டி­கில் கில்பா வீதி­யில் நேற்­றுப் பிற்­ப­கல் 1.30 மணி­ய­ள­வில் இடம்­பெற்ற வீதி­வி­பத்­தில் ஈழ ஏதிலி ஒரு­வர் உயி­ரி­ழந்­துள்­ளார்.

வீதி­யால் நடந்து சென்­று­கொண்­டி­ருந்த போது பின்­னால் வந்த ‘ட்ரக்’ மோதி­ய­தி­லேயே இந்­தச் சம்­ப­வம் இடம்­பெற்­ற­தாக கூறப்­ப­டு­கி­றது.

மன்­னார் பேசா­லையை சேர்ந்த 25 வய­து­டைய மேர்­வின் பெர்­ணான்டோ என்ற இளை­ஞரே உயி­ர­ழந்­துள்­ளார். சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டைய மலே­சி­யா­வைச் சேர்ந்த தமி­ழர் ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

2012 ஆம் ஆண்டு படகு மூலம் பெர்­ணான்டோ ஆஸ்­தி­ரே­லியா வந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

No comments

Powered by Blogger.