அதர்வாவின் ‘குருதி ஆட்டம்’ ஆரம்பம்!

இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில், அதர்வா நடிக்கும் ‘குருதி ஆட்டம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது.
8 தோட்டாக்கள் என்ற தனது முதல் படத்தின் மூலமே தமிழ் சினிமாவில் கவனம் பெற்றவர் இயக்குநர் ஸ்ரீகணேஷ். க்ரைம் த்ரில்லர் ஜானரில் அவர் இயக்கியிருந்த அப்படம் ரசிகர்களிடையேயும் விமர்சகர்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அடுத்தாக அதர்வாவை கதாநாயகனாகக் கொண்டு அவர் இயக்கும் புதிய படம் ‘குருதி ஆட்டம்’. பெயருக்கு ஏற்ற படியே இந்தப் படத்தையும் க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாக்க உள்ளார். மதுரையைக் கதைக்களமாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
ராக் போர்ட் என்ட்டர்டைன்மென்ட் , பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. அதர்வாவுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடிக்கிறார். இவர்களுடன், ராதிகா சரத்குமார், ராதாரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். சமீபத்தில், படத்திற்கான பூஜை போடப்பட்ட நிலையில் இன்று பாடப்பிடிப்பு துவங்கியுள்ளது.
மேலும், அதர்வா நடிப்பில் ‘பூமராங்’, ‘100’ உள்ளிட்ட படங்கள் விரைவில் திரைக்கு வர இருக்கின்றன.

No comments

Powered by Blogger.