உதயநிதி படத்தில் இணைந்த 'RX-100' நடிகை!

உதயநிதி நடிக்கும் ஏஞ்சல் படத்தில் இணைந்துள்ளார் ஆர் எக்ஸ் 100 பட புகழ் நடிகை.
தமிழில் கார்த்திக்கின் தொட்டாச்சிணுங்கி, பார்த்திபன்-பிரகாஷ் ராஜ் நடித்த சொர்ணமுகி, இந்தியில் ஷா ருக் கான்-சல்மான் கான் நடித்த ஹும் தும்ஹாரே ஹைன் சனம் போன்ற படங்களை இயக்கியதன் வாயிலாகக் கவனம்பெற்றவர் இயக்குநர் கே.எஸ். அதியமான். கடைசியாக 2008ஆம் ஆண்டு ஷ்யாம் நடிப்பில் உருவான தூண்டில் என்னும் படத்தை இயக்கியிருந்த அவர் தற்போது உதயநிதியை வைத்து ஏஞ்சல் எனும் படத்தை இயக்கவுள்ளார்.
ரொமான்டிக் ஹாரர் படம் எனக் கூறப்படும் இதில் நடிகை கயல் ஆனந்தி நடிக்கவுள்ளார். இந்நிலையில் இப்படத்தில் மற்றொரு கதாநாயகியாக பாயல் ராஜ்புத்தும் நடிக்கவுள்ளார். தெலுங்கில் சமீபத்தில் வந்து வெற்றிபெற்ற ‘ஆர்.எக்ஸ்-100’ என்னும் படம் வாயிலாகக் கவனம் பெற்றவர் இவர் என்னும் விஷயம் குறிப்பிடத்தக்கது.
அடுத்த ஆண்டு வெளியிடத் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படும் இப்படத்தை ஓஎஸ்டி ஃபில்ம்ஸ் தயாரிக்கவுள்ளது.

No comments

Powered by Blogger.